தன் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கு குறித்து நிவேதா பெத்துராஜ் தகவல் அளித்துள்ளதாவது:
@nivetha_tweets என்பதுதான் என்னுடைய சொந்த ட்விட்டர் கணக்கு. எனது பெயரில் பல போலியான ட்விட்டர் கணக்குகள் உள்ளன. எனவே தான் இப்போது இந்த விடியோவை வெளியிடுகிறேன். என் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதற்குச் சிறிது காலமெடுக்கும். மேலும் எனது ட்விட்டர் கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலமெடுக்கும். எனவே அனைவரும் இந்தக் கணக்கைப் பின்தொடருங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.