செய்திகள்

இன்று நடைபெற்றது நிச்சயதார்த்தம் அல்ல: ராணா டகுபதி தந்தை பேட்டி

மணமக்களின் பெற்றோர்கள் சந்தித்துக் கொள்வது தெலுங்குக் குடும்பங்களின் வழக்கமாகும்...

DIN

நடிகர் ராணா டகுபதிக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என அவருடைய தந்தை சுரேஷ் பாபு பேட்டியளித்துள்ளார்.

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.

இந்நிலையில் மிஹீகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்று வெளியிட்டார் ராணா டகுபதி. இதையடுத்து அவருக்கும் மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இதை மறுத்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் பாபு கூறியதாவது:

இன்று நடைபெற்றது நிச்சயதார்த்தம் அல்ல. திருமணத்துக்குப் பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இணைந்து இன்று விவாதித்தன. நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கும் திருமணத் தேதி குறிப்பதற்கும் முன்பு மணமக்களின் பெற்றோர்கள் சந்தித்துக் கொள்வது தெலுங்குக் குடும்பங்களின் வழக்கமாகும். அதுதான் இன்று நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெற்றோா் தங்களது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடக்கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

நாகையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

SCROLL FOR NEXT