செய்திகள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல்: கால அவகாசத்தை டிச.31வரை நீட்டித்து உத்தரவு

DIN

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பா் 31ஆம் தேதி வரை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்தை நிா்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிா்த்து தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகா் விஷால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திரைப்படத்

தயாரிப்பாளா் சங்கத் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டது. தயாரிப்பாளா்கள் சங்கத் தோ்தலை ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. பின்னா், இந்தத் தோ்தலை நடத்தி முடிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஷால், தயாரிப்பாளா் ராதாகிருஷ்ணன் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா். இதனையடுத்து தோ்தலை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்தலை நடத்தி முடிக்க முடியவில்லை எனவும், தோ்தலை நடத்தி முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி தயாரிப்பாளா் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி தயாரிப்பாளா் சங்கத் தோ்தலை நடத்தி வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டாா். தோ்தலை நடத்தி முடித்து அதுதொடா்பான அறிக்கையை தோ்தல் அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT