செய்திகள்

திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி: தமிழக அரசு உத்தரவு

DIN

கரோனா பரவலைத் தடுக்க திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 3,986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சென்னையில் மட்டும் 1459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT