செய்திகள்

'பாரதி கண்ணம்மா' தொடரில் திடீர் திருப்பம் - வெளியான விடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' தொடரின் முன்னோட்டம் வெளியாகி வைரலாகி வருகிறது.

எஸ். கார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' தொடரின் முன்னோட்டம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் தொடரில் சில மாதங்களுக்கு முன் பாரதியுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் கண்ணம்மா கைப்பையுடன் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களில் அலைந்தார். இந்தக் காட்சிகள் ஒரு வராமாக ஒளிபரப்பாகின.  இதனை அடிப்படையாக பல்வேறு மீம்ஸ்கள் பறந்தன. 

பாரதியைப் பிரிந்து வாழும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை கண்ணம்மாவிடம், மற்றொரு குழந்தை பாரதியிடமும் வளர்கின்றன. ஆனால் இந்த உண்மை பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் தெரியாது.  சமீபத்தில் பாரதியிடம் வளரும் குழந்தை தன் குழந்தை தான் என கண்ணம்மாவிற்கு தெரியவந்தது. 

இந்த நிலையில் தான், கண்ணம்மாவிடம் வளரும் குழந்தைக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட, குழந்தைக்கு பாரதி வைத்தியம் பாரக்கிறான். அப்போது குழந்தையைப் பற்றி தெரிந்துகொள்ள அவளது பள்ளிப் பையை திறந்து பார்க்கிறான். அதில் கண்ணம்மாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். இதனையடுத்து பாரதியின் முடிவை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

SCROLL FOR NEXT