செய்திகள்

தஞ்சாவூர் கோயில் பற்றி நடிகை ஜோதிகா பேசியதன் விளைவு என்ன தெரியுமா ? - இயக்குநர் சொன்ன தகவல்

DIN

தஞ்சாவூர் கோயில் குறித்து நடிகை ஜோதிகா பேசியதன் விளைவு குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது முக நூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

நடிகர் சூர்யா தயாரிப்பில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உடன் பிறப்பே'. இந்தப் படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். 

இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா, ''நான் தஞ்சாவூர் பெரிய கோயிலின் பெருமைகளைப் பற்றி என்னிடம் கூறி அந்தக் கோயிலுக்கு நான் செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்த்திருக்கிறேன். 

உதய்பூரில் உள்ள அரண்மனை போல கோயிலைப் பராமரித்து வருகிறார்கள். எனக்கு அடுத்த நாள் படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. மருத்துவமனையை மிகவும் மோசமான நிலையில் பராமரித்திருந்தார்கள். கோயிலுக்காக நிறைய செலவு செய்கிறீர்கள். கோயில் உண்டியலில் பணம் செலுத்துகிறீர்கள். அதேப் போல மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

நடிகை ஜோதிகாவின் பேச்சு மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு தரப்பினரும் ஜோதிகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் கோயில் பற்றி ஜோதிகாவின் கருத்து குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூல் பக்கத்தில், ''தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. அப்பொழுது, குழந்தை பிறந்த அடுத்த நாள் தாயை, மருத்துவமனையின் வெளியில் அமர வைத்த சம்பவம் அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த ஆதங்கத்தை தான் அவர் பதிவு செய்தார். 

மேலும் அந்த மருத்துவமனைக்கு அவர் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். ஜோதிகாவின் பேச்சின் எதிரொலியால் தான் தமிழக அரசு அந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மருத்துவ வளாகத்தை சுத்தப்படுத்தியபோது பாம்புகள் பிடிக்கப்பட்டன. இதெல்ல்லாம் நடிகை ஜோதிகாவின் பேச்சால் நிகழ்ந்த மாற்றங்கள்'' என்று பதிவு செய்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT