செய்திகள்

'தேவர் மகன் 2'வில் விக்ரம் - விஜய் சேதுபதி ?

கமல்ஹாசனின் 'தேவர் மகன் 2'வில் விக்ரம் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

DIN


கமல்ஹாசனின் 'தேவர் மகன் 2'வில் நடிகர்கள் விக்ரம் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நடிகர் கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான படம் 'தேவர் மகன்'. மலையாள இயக்குநர் பரதன் இயக்கியிருந்த இந்தப் படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை வென்றது. 

ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களான நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், இசையமைப்பாளர் இளையாராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீநிவாசன் ஆகியோரின் பங்களிப்பால் இந்தப் படம் தமிழ் திரையுலகில் புது வரலாறு படைத்தது. 

குறிப்பாக 'வீரம்னா என்னனு தெரியுமா ? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது'' போன்ற நடிகர் கமல்ஹாசனின் வசனங்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தன. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை கமல்ஹாசன் தற்போது எழுதி வருவதாகவும், அதில் விக்ரம் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

கமல்ஹாசன் கதை எழுதி, தயாரித்த 'கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் தற்போது தயாரிக்கும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

SCROLL FOR NEXT