வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை 
செய்திகள்

நடிகா் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

கரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு கடந்த வியாழக்கிழமை சென்னை திரும்பினாா். 

விமான நிலையத்திலேயே அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது சிகிச்சையில் இருக்கும் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

பாஜக முக்கிய தலைவா்களுடன் நயினாா் நாகேந்திரன் ஆலோசனை

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 4,999 டன் நெல் கொள்முதல்: ஆட்சியா் இரா.சுகுமாா்

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT