2013-ல் சூது கவ்வும் படத்தில் நடிகராக அறிமுகமானவர், அசோக் செல்வன். கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே பெரிய அளவில் வெற்றி பெற்று அசோக் செல்வனுக்கு அதிகக் கவனத்தை அளித்தது.
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் வெங்கட் இயக்கும் படத்தில் அசோக் செல்வன், ரேயா, அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ். ரவிகுமார், பானுபிரியா, அனுபமா குமார் போன்றோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுது. இப்படம் பற்றிய அறிவிப்பை பிரபல நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுக் கூறியதாவது:
சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ட்விட்டரில் கமல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.