செய்திகள்

தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மாறன் ? - முதல் பார்வை போஸ்டர் இதோ

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாறன் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

DIN

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாறன்' பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

போஸ்டரில் தனுஷ் தனது கையால் ஒருவரின் தலையை கண்ணாடியில் மோத, அந்தக் கண்ணாடி சிதறுவதுபோல் உள்ளது. தனுஷ் முறைத்துக்கொண்டிருக்க, பல துகள்களாக சிதறிய கண்ணாடியில் அவரது பிம்பம் பிரதிபலிக்கிறது. இதனையடுத்து இந்தப் படம் சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

இந்தப் படத்துக்கு மாறன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் பெயரும் இந்தப் படத்தில் மாறனாக இருக்கலாம். பாடலாசிரியர் விவேக் இந்தப் படத்தில் கார்த்திக் நரேனுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான அசுரன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இந்தப் படத்தின் இசை குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும் கார்த்திக் நரனின் முதல் படமான துருவங்கள் பதினாறு படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் அரவிந்த் சாமியை வைத்து இயக்கிய 'நரகாசூரன்' படம் இன்னும் வெளியாகவில்லை. நடிகர்கள் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து அவர் இயக்கிய 'மாஃபியா' ரசிகர்களை கவரவில்லை. இந்த நிலையில் மாறன் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தனுஷ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அவர்களின்  எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் வகையில் மாறன் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT