படம் - www.hotstar.com 
செய்திகள்

அனிமேஷன் தொடராக ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள சல்மான் கானின் தபாங்!

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற சுல்புல் பாண்டே கதாபாத்திரத்தைக் கொண்டு, தபாங் படம் அனிமேஷன் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. 

DIN

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் - தபாங். முதல் பாகம் 2010-ல் வெளிவந்தது. 2012-ல் தபாங் 2, 2019-ல் தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவந்தன. 

இந்தப் படங்களில் சுல்புல் பாண்டே என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சல்மான் கான். 

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற சுல்புல் பாண்டே கதாபாத்திரத்தைக் கொண்டு, தபாங் படம் அனிமேஷன் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. 

தபாங் - தி அனிமேடட் சீரிஸ் என்கிற பெயரில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இத்தொடர் வெளியாகியுள்ளது. அர்பாஸ் கான் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் காஸ்மாஸ் - மாயா இத்தொடரைத் தயாரித்துள்ளார்கள்.

முதல் சீசனின் எட்டு எபிசோட்கள் - ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன. தகுந்த இடைவெளியில் இதர எபிசோட்கள் வெளிவரவுள்ளன. சுல்புல் பாண்டேவுடன் சேர்த்து தபாங் படத்தில் இடம்பெற்ற மகி (அர்பாஸ் கான்), ராஜோ (சோனாக்‌ஷி சின்ஹா) ஆகிய கதாபாத்திரங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. 

சுல்புல், மகி, ராஜோ கதாபாத்திரங்கள் நம் நாட்டின் குழந்தைகளைக் குதூகலப்படுத்த வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தபாங் தொடரின் எல்லா எபிசோட்களையும் எங்கள் வீட்டு குழந்தைகளுடன் சேர்ந்து காண ஆவலாக உள்ளேன் என்று சல்மான் கான் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT