செய்திகள்

ரசிகர்களுடன் உரையாடவுள்ள ஜகமே தந்திரம் படக்குழுவினர்

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

DIN

ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதால் சமூகவலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுடன் படக்குழுவினர் உரையாடவுள்ளார்கள்.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் இந்த வாரம் வெளியாகவுள்ளதால் ஜூன் 17 மாலை 4 மணிக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுடன் உரையாடவுள்ளார்கள் படக்குழுவினர். நெட்பிளிக்ஸ் இந்தியா ஓடிடி நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூகவலைத்தளங்களில் இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT