செய்திகள்

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

DIN

தமிழ்த் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 61.

சென்னையில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் சுயநினைவின்றி இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயற்கை, ஈ, பேராண்மை,புறம்போக்கு என்னும் பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய  எஸ்.பி.ஜனநாதன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

மேலும், விஜய்சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 'லாபம்' திரைப்படத்தையும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து தற்போது அத்திரைப்படத்திற்கு பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இடதுசாரி சிந்தனை மற்றும் கொள்கைகளில் நாட்டமுடைய எஸ்.பி.ஜனநாதன் அறிமுகமான 'இயற்கை' திரைப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT