செய்திகள்

பாக்யராஜ் & பூர்ணிமாவுக்கு கரோனா பாதிப்பு!

பணியாளர்கள் உள்பட நாங்கள் அனைவரும் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

DIN

நட்சத்திர தம்பதி பாக்யராஜ் & பூர்ணிமா ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

1984-ல் நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்தார் நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ். இவர்களுக்கு சரண்யா என்கிற மகளும் ஷாந்தனு என்கிற மகனும் உள்ளார்கள். ஷாந்தனு, தொலைக்காட்சித் தொகுப்பாளர் கீர்த்தியை 2015-ல் திருமணம் செய்தார். 

இந்நிலையில் பாக்யராஜ், பூர்ணிமா ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து ஷாந்தனு ட்விட்டரில் கூறியதாவது:

அப்பா, அம்மா இருவருக்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் உள்பட நாங்கள் அனைவரும் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். கடந்த 10 நாள்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். விரைவில் குணமாகி வருவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT