இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-5) ஆரம்பமாகியிருக்கிறது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-5) ஆரம்பமாகியிருக்கிறது.
’கற்றது தமிழ்’ ‘தங்க மீன்கள்’ ‘தரமணி’ ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராம் அடுத்ததாக மலையாள நடிகர் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தனுஷ்கோடியில் படக்குழு தொடங்கியிருக்கிறார்கள்.
’மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும் நிவின் பாலியுடன் , அஞ்சலி , சூரி உள்ளிட்டோரும் நடிக்க இருக்கிறார்கள்.