செய்திகள்

விஜய், சிம்பு பட இயக்குநருடன் இணையும் விமல் !

DIN

விமல் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கவிருக்கிறார். 

விஜய் நடிப்பில் செல்வா, நிலாவே வா, பகவதி, சிம்புவின் குத்து, தம், சரத்குமார் நடிப்பில், ஏய், சாணக்யா, அருண் விஜய் நடிப்பில் மலை மலை, மாஞ்சா வேலு, அர்ஜூனின் வாத்தியார், துரை போன்ற பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். மேலும் அங்காடித் தெரு, அசுரன் போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார். 

இவர் இயக்கும் புதிய படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை வி. பழனிவேல் தயாரிக்க, நடிகர் தம்பி ராமையா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அம்ரீஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா பூஜையுடன் இன்று (09.10.201) நடைபெற்றது. 

இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், இது வழக்கமான பேய் படம் அல்ல. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கப்படவிருக்கிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT