செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' குறித்து இயக்குநர் பகிர்ந்த தகவல்: அடுத்தது 'வாடிவாசல்'?

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்த தகவலையடுத்து, நடிகர் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

DIN

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்த தகவலையடுத்து, நடிகர் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எதற்கும் துணிந்தவன்' படம் 51 நாட்கள் தொடர்சியாக படப்பிடிப்பு நடந்து இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது.

மழையும், வெயிலும் எங்களது உழைப்பை தடுத்த நிறுத்த வில்லை. எங்கள் குழுவின் உழைப்பானது,  நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. நடிகர் சூர்யா, சன் பிக்சர்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் பெயரில் ஏற்கனவே நடிகர் சிவகுமாரின் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இந்தப் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. 

வெற்றிமாறன் தற்போது சூரி - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விடுதலை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக வருகிற நவம்பர் மாதம் 'வாடிவாசல்' படத்தின் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT