செய்திகள்

இரண்டாவது கல்யாணம் செய்துகொண்ட 'அண்ணாத்த' பட நடிகர் : வெளியான புகைப்படம்

DIN

'அண்ணாத்த' பட நடிகர் பாலா தனது திருமண புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் இயக்குநர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர் பாலா வீரம் படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளார். மேலும் ஏராளமான மலையாளப் படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனது திருமணப் புகைப்படத்தை  முகநூல் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துகளைக் கோரியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT