செய்திகள்

விஜயகுமார், அருண் விஜய், அவரது மகன் என 3 தலைமுறையினர் இணைந்து நடித்த 'ஓ மை டாக்' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

 விஜயகுமார் - அருண் விஜய் - அவரது மகன் ஆர்னவ் என மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்த ஓ மை டாக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

DIN


நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் என 4 படங்களை தயாரித்தனர். இந்தப் படங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

முதல் 3 படங்கள் அறிவித்தபடி வெளியானது. ஆனால் ஓ மை டாக் திரைப்படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை சூர்யா அறிவித்துள்ளார். அதன் படி இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் விஜயகுமார், அருண் விஜய் அவரது மகன் ஆர்னவ், வினய், மகிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சரோவ் சண்முகம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT