செய்திகள்

சூர்யா படத்தைக் காண விருப்பம் தெரிவித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் சூர்யா தயாரித்துள்ள ஓ மை டாக் படத்தைக் காண தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

DIN

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் இன்று (ஏப்ரல் 21) நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்தப் படத்தில் தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், மகன் ஆர்னவ் விஜய் என மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கான படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படம் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ மை டாக் படத்தைக் காண ஆவலாக இருப்பதாக கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், செல்லப் பிராணிகளின் நலம் விரும்பியாக இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவருக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, ''நன்றி சார். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் இந்தியா ரோட்ஸ்க்கு இந்தப் படம் மிகவும் என உறுதியாக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT