செய்திகள்

நாளை முதல் காத்துவாக்குல ரெண்டு காதல்: நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN


காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இதுபற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு:

"நாளை முதல் காத்துவாக்குல ரெண்டு காதல்! ராம்போவாக விஜய் சேதுபதி, கண்மணியாக நயன்தாரா, கதிஜாவாக சமந்தா ஆகியோரது சிறப்பான திறனை நீங்கள் கொண்டாடுவதைப் பார்ப்பதற்காகவே இது திரையரங்கிற்கு வர வேண்டும் என விரும்பினேன். இந்தப் படத்தை எளிமையாக எடுத்து முடிப்பதற்குக் காரணமாக இருந்த இந்த நடிகர்களுக்கு (விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா) நன்றி.

இவர்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தருணம், அனுபவம் நீண்ட நாள்களுக்கு என்னுள் இருக்கும்."

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பான் நாடாளுமன்றத்தை பதவியேற்ற மூன்றே மாதத்தில் கலைத்த பிரதமர்!

பிரதமர் Modi-யின் X தளப்பதிவுக்கு பதிலளித்த முதல்வர் MK Stalin! | BJP | DMK

ஓடிடியில் வெளியானது சிறை!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? - ராமதாஸ் கண்டனம்!

SCROLL FOR NEXT