செய்திகள்

''இந்த முறை மிஸ் ஆகாது'' - நடிகர் விக்ரம் உறுதி

ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் விக்ரம் பதிலளித்தார். 

DIN

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறன்றன.  விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி, மியா ஜார்ஜ், கனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கோப்ராவில் 7 தோற்றங்களில் நடிகர் விக்ரம் நடித்துள்ளாராம். சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த விக்ரம் நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினார். 

அப்போது பேசிய அவர்,  ''கோப்ராவில் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறேன். அவை திணிக்கப்பட்டதாக இருக்காது. கதைக்கு மிகவும் தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது உணர்வீர்கள். 

இந்தப் படத்துக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது. நிச்சயம் திரைக்குவரும். துருவ்வுடன் நான் நடித்த கோப்ரா திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டியது. மிஸ் ஆகிவிட்டது. இந்த ஆண்டு கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் திரைக்குவரவிருக்கிறது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT