செய்திகள்

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை - நீதிமன்றம் அதிரடி - என்ன காரணம்?

DIN

இயக்குநர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் என்ற படத்தை லிங்குசாமி இயக்கினார். 

இந்தப் படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களை இந்தப் படம் கவராததால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் நீதிமன்றத்தில், எண்ணி ஏழு நாள் என்ற படத்துக்காக தங்களிடம் இயக்குநர் லிங்குசாமி கடன் பெற்றிருந்ததாகவும், பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அளித்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT