செய்திகள்

மறைந்த கொரியன் நடிகையின் தற்கொலைக் கடிதத்தைப் பகிர்ந்த சகோதரர் - மனதை உலுக்கும் சம்பவம்

DIN

இறந்தபோன கொரியன் நடிகையின் தற்கொலை கடிதத்தை அவரது சகோதரர் பகிர்ந்துள்ளார். 

கொரியன் நடிகை யோ ஜு என் 'பிக் ஃபாரஸ்ட்' மூலம் அறிமுகமானார். பின்னர் 'நெவர் டுவைஸ்' போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோ ஜூ இன்று (ஆகஸ்ட் 29) தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

இந்த நிலையில் யோ ஜூ என்-ன் சகோதரர் அவரது தற்கொலைக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ''நான் விட்டுச்செல்வதற்கு என்னை மன்னியுங்கள். நான் வாழக்கூடாது என என் மனம் கத்துகிறது. நீங்கள் நான் இல்லாத வெற்றிடத்தை உணர்வீர்கள். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உங்களை மேலிருந்து பார்ப்பேன். அழாதீர்கள். அது உங்களது உடல் நலத்திற்கு நல்லதில்லை. 

நான் சோகமாக இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் மிக அமைதியாக இருக்கிறேன். காரணம் இது பற்றி நீண்ட நாட்களாக நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நான் எனக்கு முற்றிலும் தகுதியில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் மரணத்துக்கு யாரையும் காரணமாக்காதீர்கள். என் இறுதிச்சடங்கில் நிறைய நபர்களைக் காண்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

எனக்கு நடிக்க வேண்டும். அது தான் எனக்கு எல்லாம். ஆனால் அதனை அடைவது அவ்வளவு எளிது அல்ல. அதனைத் தவிர பிறவற்றில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. இது மிகவும் மோசமான நிலை.

கனவைக் கொண்டிருப்பது ஒரே நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் மற்றும் வசையைப் போன்றது. கடவுள் என்னை நரகத்திற்கு அழைத்து செல்லமாட்டார் என்று உறுதியாக இருக்கிறேன். காரணம் அவர் என்னை நேசிக்கிறார். கடவுள் என்னைப் பார்த்துக்கொள்வார். அதனால் யாரும் கவலைப்படாதீர்கள். 

நான் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன். காரணம் கடைசி வரை மறக்கமுடியாத நினைவுகள் எனக்கு கிடைத்தது'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பி ஓடிய 3 இளைஞா்கள் கைது

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: உரிமை கோருவோருக்கு அழைப்பு

வள்ளலாா் சபையில் பூச விழா, கருத்தரங்கம்

விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

SCROLL FOR NEXT