செய்திகள்

‘10 வாரங்களாக நாமினேஷன்கூட வரவில்லை’: கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்!

DIN

பிக் பாஸ் போட்டியில் கடந்த 10 வாரங்களாக நானினேஷனில் கூட இடம்பெறாமல் கலக்கி வருகிறார் சிவின்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 9 வாரங்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஷி, ராம், ஆயிஷா ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு மக்களிடமிருந்த குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு இரண்டாவது வாரத்திலேயே விலகினார்.

இதற்கிடையே கடந்த 9 வாரங்களாக சக போட்டியாளர்களால் நாமினேஷன் கூட செய்யப்படாமல் இருந்த சிவின், தற்போது 10-வது வாரத்திலும் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

திருநங்கையான சிவின், கடினமான போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் ஆவார். அனைத்து டாஸ்க்கிலும் தனது தனித்துவ திறமையை வெளிப்படுத்தி வருவது அவருக்கு பலமாக கருதப்படுகிறது.

வீட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைகளில் தலையிட்டு நியாயமான கருத்துகளை தெளிவாக முன்வைத்து வருவது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

அஷீம், விக்ரமன் போன்ற கடுமையான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியில் தங்களுக்கான மக்களின் ஆதரவை பார்த்துள்ளனர். சிவின் இதுவரை நாமினேஷனே ஆகாததால் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்ததில்லை என்றே கூறலாம்.

ஆனால், சிவின் நாமினேஷன் செய்யப்படும் பட்சத்தில் இன்றைய தினத்திற்கு அவருக்கு இருக்கும் ஆதரவின்படி முதல் ஆளாக காப்பாற்றப்படுவது உறுதி. பிக் பாஸின் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் சிவினுக்கு இடமுண்டு என்றே பலரின் எண்ணமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT