செய்திகள்

''ஜெய் பீம் படம் பார்த்தேன்...'': பிரபல மலையாள இயக்குநர் விமர்சனம்

ஜெய் பீம படம் தொடர்பாக பிரபல மலையாள இயக்குநர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார். 

DIN

நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெய் பீம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ஜெய் பீம் படம் பார்த்தேன். மிக உணர்வுப்பூர்வமான படம்.

தைரியமான படத்தை தயாரித்தற்காக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படக்குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அல்போன்ஸ் தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ், நயன்தாரா இணைந்து நடிக்கும் கோல்டு படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

பிரேமம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார். முன்னதாக ஃபகத் ஃபாசில் நடிக்கும் பாட்டு என்ற படத்தை அல்போன்ஸ் இயக்கவிருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

SCROLL FOR NEXT