செய்திகள்

வெற்றி பாடலுக்கு மேடையில் ராம் சரணுடன் நடனமாடிய கீர்த்தி சுரேஷ் : வைரலாகும் விடியோ

மேடையில் ராம் சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடனமாடும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள குட் லக் சகி என்ற படம் நாளை (ஜனவரி 28) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது ராம் சரணும் கீர்த்தி சுரேஷும் இணைந்து ஆர்ஆர்ஆர் பட நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதன் காரணமாக அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.

இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குட் லக் சகி படத்தில் நடிகர் ஆதி, ஜெகபதி பாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். 

தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏ ஷாட் மோசன் நிறுவனம் தயாரிக்க, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் அட்லுரி நாராயண ராவ் ஆகியோர் வெளியிடுகின்றனர். நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT