செய்திகள்

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.  

DIN

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.  

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் இன்று  வெளியானது. 

இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல் வெளியாகியுள்ளது. 

தமிழில் அஸ்வினும், மலையாளத்தில் சஞ்சு சாம்சனும், தெலுங்கில் பி.வி.சிந்துவும் பாடலை வெளியிட்டனர். அதேசமயம் பாடல் வெளியீட்டிற்கான நிகழ்ச்சியும் சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ என்ற வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. 

நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT