செய்திகள்

நெல்சனின் 'கோலமாவு கோகிலா' ஹிந்தி ரீமேக் - முக்கிய தகவல்

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகிறது. 

DIN

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகிறது. 

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோலமாவு கோகிலா திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரசியமான கதையமைப்புடன் இந்தப் படம் உருவாகியிருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு பாடல் மிகவும் பிரபலமானது. 

இந்தப் படம் ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் சென் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

இந்தப் படம் நயன்தாராவைப் போல ஜான்வி கபூருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயரைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனது கணவர் கூடைப்பந்து விளையாடுகிறாரா? ஃபிஃபா விருதில் புறக்கணிக்கப்பட்ட ரஃபீனியாவின் மனைவி கேள்வி!

ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல்!

எத்தனை பேரு.... ஜெயிலர் - 2 படத்தில் நோரா ஃபதேகி!

உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT