இந்தி நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
இந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
தற்போது ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் குழந்தையின் உருவத்தை கணினி பரிசோதனையில் கணவர் ரன்வீர் கபூருடன் சேர்ந்து பார்க்குமாறு ஒரு புகைப் படத்தினை பதிவு செய்து, “எங்கள் குழந்தை... விரைவில் வரவிருக்கிறது...” என பதிவிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆலியாபட்- ரன்வீர் கபூர் இணைக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படம்: மாமனிதனை பாராட்டிய மிஷ்கின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.