செய்திகள்

''எதிர்போர் செயலுக்கும்...'': முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 

DIN


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ''மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க'' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி மெரினாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பெரியார் திடலுக்கு சென்ற அவர், பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT