செய்திகள்

பா.ரஞ்சித்தின் 'ஜே.பேபி' முதல் பார்வை போஸ்டர் வெளியீடு: கதை இதுதான்!

பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்து வரும் ஜே பேபி படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். முன்னதாக 'ரைட்டர்' படத்தை மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். 

தற்போது இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் 'ஜே பேபி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்குகிறார். இந்தப் படத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அம்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் பற்றிய கதை எனவும், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

'பாரம்' படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். டோனி பிரிட்டோ இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தொடர்ந்து தரமான படங்களை பா.ரஞ்சித் தயாரித்துவருவதால், அவர் அடுத்ததாக தயாரிக்கும் 'ஜே.பேபி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்கல்லில் பேருந்தில் குழந்தையின் நகை திருட்டு: பெண் கைது

கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்தில் திமுகவினா் பிரசாரம்

அதங்கோட்டாசான் சிலைக்கு சாா் ஆட்சியா் மரியாதை

கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் இன்று புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி

விளவங்கோடு அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

SCROLL FOR NEXT