செய்திகள்

இன்று எத்தனை தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன? (டிரெய்லர்கள்)

DIN

ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் உள்பட ஐந்து புதிய தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகின்றன. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவான சாணிக் காயிதம் படம் நேற்றிரவு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

மேலும் கூகுள் குட்டப்பா, விசித்ரன், அக்கா குருவி, துணிகரம் என இன்று நான்கு தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

2018-ல் வெளியான மலையாளப் படம் - ஜோசப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரித்துள்ளார் இயக்குநர் பாலா. ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் நடிப்பில் எம். பத்மகுமார் இயக்கிய மலையாளப் படம் - ஜோசப். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார். ஜோசப், தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

1997-ல் வெளிவந்த ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனை இயக்கியவர், மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. உலக சினிமா ஆர்வலர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இளையராஜா இசையில் சாமி இயக்கத்தில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனின் தமிழ் ரீமேக், அக்கா குருவி என்கிற பெயரில் உருவாகியுள்ளது. மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ளன. மாஹின் என்கிற சிறுவனும் டாவியா என்கிற சிறுமியும் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜா எழுதியுள்ளார்.

2019-ல் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சுராஜ், செளபின் போன்றோர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பெற்றுள்ளார். கமல் நடித்த தெனாலி படத்துக்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பாவை இயக்கியுள்ளார்கள். இசை - ஜிப்ரான். 

ஏ4 மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பாலசுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துணிகரம். குழந்தைக் கடத்தல் பற்றிய படம் இது. படத்தின் 2-ம் பாதி முழுக்க ஆம்புலன்சில் பயணிக்கிறது. செம்மலர் அன்னம், வினோத், பரணி போன்றோர் நடித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT