செய்திகள்

தி லெஜண்ட் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபல நடிகைகளின் பட்டியல்!

பான் இந்தியா படம் - பான் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்பு...

DIN

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஊர்வசி ரெளடேலா, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். மொசலோ மொசலு, வாடிவாசல் என இப்படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 29 அன்று மாலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல நடிகைகளின் பட்டியல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தமிழின் முன்னணி நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, ராய் லக்‌ஷ்மி, ஊர்வசி ரெளடேலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா, ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாதி போன்றோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். 

பான் இந்தியா படம் - பான் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்பு - (இசை வெளியீட்டு விழாவில்) ஆடல், பாடல்கள் என இசை வெளியீட்டு விழாவின் விளம்பரத்தில் நிகழ்ச்சி பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT