செய்திகள்

இயக்குநர் ராம் - யுவன் கூட்டணியின் புதிய பட தலைப்பு என்ன தெரியுமா?

இயக்குநர் ராம் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

இயக்குநர் ராம் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வித்தியாசமான முயற்சிகளின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம். இவரது கற்றது தமிழ் படமும் அதன் பாடல்களும் பலரது விருப்பப் பட்டியலில் இருந்துவருகின்றன. 

இந்த நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் புதிய படமொன்றை ராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநாடு படத்தை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இயக்குநர் ராம் - யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணியின் பாடல்களுக்கு எப்பொழுதும் வரவேற்பு இருக்கும். அதன் ஒரு பகுதியாக இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஏழு கடல் ஏழு மலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தலைப்பு அறிவிப்பு விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT