கோப்புப்படம் 
செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் சீரியல் நடிகர் அர்ணவ் கைது!

தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் சீரியல் நடிகர் அர்ணவ் கைது செய்ய்பட்டுள்ளார்.

DIN

தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் சீரியல் நடிகர் அர்ணவ் கைது செய்ய்பட்டுள்ளார்.

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், 'மகராசி' சீரியலில் நடித்திருந்தார். 

புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் 'அர்ணவ்' என்ற பெயரில் தற்போது 'செல்லம்மா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திவ்யாவுக்கு அர்ணவுடன் கடந்த 2017ல் சீரியலில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு லிவ்-இன்னில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் கணவர் அர்ணவ் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா விடியோ ஒன்றை வெளியிட்டார்.

கரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும், இருந்தும் அவர் தன்னை துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார். 

ஆனால், அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டதுடன் அவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார். 

தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார், மேலும் மருத்துவமனையில் இருந்து அவர்  அந்த விடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் பூவிருந்தவல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அர்ணவை மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஓபன் மகளிா் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்!

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

பிடாரம்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

விளாத்திகுளம் எம்எல்ஏ மக்கள் குறைகேட்பு

SCROLL FOR NEXT