செய்திகள்

வாரிசுடன் மோதும் பிரபாஸின் ஆதிபுருஷ் - புதிய போஸ்டர் வெளியீடு

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதாக பாஜகவினர் ஆதிபுருஷ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மற்றொரு புறம் இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் கார்டூன் தொலைக்காட்சிகளை விட மோசமாக இருப்பதாக தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி ஷனோன் நடிக்க, சயீப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். 

பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக்டோபர் 23) புதிய போஸ்டர் வெளியாகி ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறது.  

இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றப்படாம் என்று கூறப்படுகிறது. 

வாரிசு படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளதால் பிரபாஸ் படத்துடன் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT