செய்திகள்

ஓராண்டுக்கு முன்பாகவே சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவி புகழ் ஓராண்டுக்கு முன்பாகவே சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

விஜய் டிவி புகழ் ஓராண்டுக்கு முன்பாகவே சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவி புகழுக்கும் கோவையைச் சேர்ந்த பென்ஸியா என்பவருக்கும் சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண புகைப்படங்களை புகழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே புகழ், பென்ஸியாவை கோவை பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்களுக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஏராளம். தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். 

மேலும் ஜூ கீப்பர் என்ற படத்தில் தற்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT