தாத்தாவின் ஊருக்கு சென்ற கண்ணதாசனின் பேரன்: புகைப்படங்களைப் பகிர்ந்து உருக்கம்
கண்ணதாசனின் பேரன் தாத்தாவின் பிறந்த ஊருக்கு சென்றுள்ளார்.
கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணதாசனின் மகன் கலைவாணனுடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கண்ணதாசனின் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு பேருந்து நிறுத்தம், அங்கு நிறுவப்பட்டுள்ள கண்ணதாசன் சிலை உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்து ஆதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில், தான் வந்த பாதை எதுவென்று அறிந்தவன் அவன் செல்லும் பாதை சரியா தவறா என்பதையும் அறிவான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 'மைக்கேல் மதன காம ராஜன்' பட நடிகர் மரணம் : ரசிகர்கள் இரங்கல்
Advertisement
Advertisement
ஆதவ் கண்ணதாசன் பொன்மாலைப் பொழுது படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பரத்துடன் அவர் இணைந்து நடித்த காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தாழ் திறவாய் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.