இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
மாநாடு படத்துக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் சிம்புவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது.
மாநாடு படம் வெளியாவதற்கு முன்பே அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, மன்மத லீலை என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் ரபிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படம் தற்போதைய தலைமுறை காதலை பேசுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு
மணிவண்ணன் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியிருந்தார். தமிழ் ஏ அழகன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன், கோமாளி பட நாயகி சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். பிரேம்ஜி வழக்கம்போல நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மாநாடு படத்துக்கு பிறகு வெளியாகும் இயக்குநர் வெங்கட் பிரபு படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.