5 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா
பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு பாவனா நடிக்கும் மலையாளப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 2017-ல் கடைசியாக ஏடம் ஜுவான் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து 5 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் பாவனா.
Advertisement
Advertisement
Ntikkakkakkoru Premondarnn என்கிற மலையாளப் படத்தில் பாவனா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாவனா, ஷரஃபுதீன் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அதில் அஷ்ரஃப் இயக்குகிறார். இசை - பால் மேத்யூஸ். இப்படத்தின் போஸ்டரைப் பிரபல நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.