சிம்பு வெளியிட்ட ‘ரத்தசாட்சி’ படத்தின் டீசர்!
ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ரத்தசாட்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் ஆகியவை இணைந்து வெளியிடும் "ரத்தசாட்சி" படத்தினை பற்றி நவம்பர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ‘கைதிகள்’. இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ரத்தசாட்சி.
இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளம் விரைவில் வெளியிட உள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் ப்ரோமைவை பகிர்ந்தார். தற்போது படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “அன்பு ஓர் ஆயுதம். ஆஹா தமிழில் இந்த புரட்சிகரமான படத்தை பாருங்கள். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.