நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் உலகளவில் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
மேலும், இதில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: ஜவான் - ராமையா வஸ்தாவையா பாடல் வெளியீடு!
இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் நடிகை துஷாரா விஜயனும் நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.