செய்திகள்

ஃபைட் கிளப் டீசர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கிய நடிகர் விஜய்குமார்! 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கிய  லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். 

லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய் குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ எனப் பெயரிட்டுள்ளனர். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  


டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் குமார், “ஆங்கில படமான ஃபைட் கிளப் படத்துக்கு இந்தப் படத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஒரு மரியாதை கொடுக்கும் வண்ணமாக அந்தப் பெயரினை வைத்துள்ளோம். லோகேஷ் எனக்கு நெடுநாள் நண்பன். அவர் குறித்து பேசிக்கொண்டே போகலாம். 

இந்தப் படத்தனை லோகேஷ் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இயக்குநர் அப்பாஸ் குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. (கண்கள் கலங்கினார். சிறிது இடைவெளி விட்டு) எனது துணை இயக்குநர்கள் கூறினார்கள் ‘சீரியசாக பேசாதீர்கள். யாருக்கும் அது பிடிப்பதில்லை’ என்றார்கள். ஆனால் இந்தப் படம் எங்களுக்கு தொழில் மட்டுமே அல்ல. அவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளோம். இயக்குநர் அப்பாஸ்ஸுக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது. அவ்வளவு சினிமா பித்தன். மணிரத்னம் ரசிகன். படம் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன்” எனப் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT