செய்திகள்

’பாராசைட்’ நடிகர் தற்கொலை!

DIN

தென்கொரியப் படமான ‘பாராசைட்’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வசதியான வீட்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர்கள் போல் பணிபுரிகின்றனர். ஏழைகளான அவர்களுக்கும் பணக்காரர்களான வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையேயான பொருளாதாரத்தால் ஏற்பட்ட வாழ்க்கை மீதான பார்வையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. 

இதில், வசதியான வீட்டின் உரிமையாளராக நடித்திருந்தவர் நடிகர் லீ சன் யுன். இவருடைய கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கி விசாரணையில் இருந்த லீ சன் கியூன், நேற்று (டிச.26) தற்கொலை செய்து கொண்டார். லீயின் உடலைப் பூங்கா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலிருந்து மீட்ட காவல்துறையினர், அவருடைய தற்கொலைக் குறிப்பையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தென் கொரிய சினிமாத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

48 வயதான லீ சன், பல்வேறு படங்களிலும் சீரியல்களிலும் நடித்து தென் கொரியாவில் பிரபலமடைந்தவர். ஹெல்ப்லெஸ், ஆல் அபவுச் மை வைஃப் என பல தென் கொரியா வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், 'டாக்டர் பிரைன்' தொடரில் நடித்தவர் கியூன்.

இவரது தற்கொலைக்குக் காரணம், போதைப்பொருள் வழக்குதான் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், தென் கொரியாவில் போதைப்பொருள் சட்டவிரோதமானது. மீறி பயன்படுத்தினால், 6 மாதங்களிலிருந்து 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.

பாராசைட் திரைப்படம் சிறந்த சர்சதேச திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT