செய்திகள்

’ஜான்வி கபூர் தமிழில் ஒப்பந்தமாகவில்லை..’: போனி கபூர்

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அவரின் தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார்.

DIN

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அவரின் தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி'யில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து சில ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியைத் தந்தன.

இந்நிலையில், தமிழில் ஜான்வி கபூர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வந்தது. தற்போது, இத்தகவலை மறுக்கும் விதமாக ஜான்வி கபூர் இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய தொழில் கூட்டமைப்பு கண்காட்சி தொடக்கம்

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

SCROLL FOR NEXT