செய்திகள்

இன்று மட்டும்... டிக்கெட் விலையை குறைத்த பதான் தயாரிப்பாளர்!

 ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒருநாள் மட்டும் குறைத்து அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

DIN

ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒருநாள் மட்டும் குறைத்து அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

இதுவரை உலகம் முழுவதும்  இத்திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்கிற சாதனையையும் ‘பதான்’ பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று(பிப்ரவரி 24) ஒருநாள் மட்டும் இந்தியாவில் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் ரூ.110-க்கு பதான் படத்தை காணலாம் என்று யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT