செய்திகள்

வைரலாகும் கே.ஜி.எஃப் இசையமைப்பாளரின் ‘கப்ஜா’ பட பாடல்! 

கப்ஜா படத்திலிருந்து வெளியான ‘பல்லாங்குழலி’ பாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

DIN

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது. 

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யஷ், இயக்குநர் பிரஷாந்த் நீல் மட்டுமல்ல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும்தான். இவரது அம்மா பாடலகாட்டும் அதிரடி காட்சிகளின்போது பின்னணி இசை ஆகட்டும் வேற லெவலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. 

கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தற்போது ‘கப்ஜா’ எனும் கன்னட திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் உபேந்திரா, சுதீப், ஷ்ரேயா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் 1940 -1980களில் நடந்த கதையாக இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ரூ.50 கோடி ரூபாயில் இந்தப் படத்தினை ஆர் சந்த்ரு தயாரித்து, எழுதி இயக்கியுள்ளார். 

தற்போது இந்தப் படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தன்யா ஹோப் கிளாமராக நடனமாடியுள்ளார். தமிழிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. மதுரகவி இந்தப் பாடலை எழுதியுள்ளார். நடனம் பீஸ்ட், வாரிசு படத்தின் மூலம் பிரபலமான ஜானி மாஸ்டர் நடனமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT