செய்திகள்

நாளை வெளியாகிறது வாரிசு டிரைலர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன.4) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

DIN

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன.4) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், அனிருத் பாடிய பாடல் உள்பட படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT