முகப்பு
செய்திகள்

வெளியானது மாவீரன் டிரைலர்! 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14ஆம் தேதியன்று வெளியாக உள்ள திரைப்படம் மாவீரன். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். 

Updated On : 2 ஜூலை 2023, 9:20 pm IST
பகிர்:


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

படத்தின் டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிப்புகள் வெளியான நிலையில், படக்குழு படத்தின் வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் டிரைலரை ஞாற்றுக்கிழமை (ஜூலை 2) படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

தொழில்நுடப்ப பிரச்னையால் மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் தாமதாக வெளியானது.

முன்னதாக, 'சீனா சீனா' பாடல் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments